இயற்கை சீற்ற மேலாண்மை் :: சுற்றுச்சூழல் மாசுபடுதல் 

பல்வகைமைக்கு தீங்கு விளைவிப்பவை

ஐக்கிய அமெரிக்காவின் : 1620, 1850 மற்றும் 1920 வரைப்படங்கள். கீழ்காணும் வரைப்படங்கள் வளமான காடுகள் இழப்பினை குறிக்கின்றன. சில காடுகள் மீண்டும் வளர்ந்தாலும் மக்கள் தொகை பெருக்கத்தாலும் உணவுப் பயிர்கள் உற்பத்தியாலும் முதலில் இருந்த 1620 ன் பரப்பளவினை நிறைவு செய்யவில்லை.

செழிப்பான காடுகளின் இழப்பையே இவ்வரை படங்கள் குறிக்கின்றன. மீண்டும் வளர்ந்தவை 1620 -இன் அளவினை பூர்த்தி செய்யவில்லை 

கடந்த நூற்றாண்டில் உயிரியல் பல்வரகமையின் இழப்பு அதிகமாக காணப்பட்டது. சில ஆய்வுகள் கூறுவது யாதெனில் நாமறிந்த தாவரங்களில் எட்டில் ஒரு பாகம் அழிவை நோக்கியுள்ளது. சில கணக்கீடுகளின் படி ஒரு வருடத்தில் 1,40,000 சிற்றினங்கள் அழிந்து கொண்டுள்ளன. இந்த கணக்கீடு ஒரு நிலையில்லாத சூழலியல் நடைமுறைகளை வெளிப்படுத்துகின்றது. அனைத்து விஞ்ஞானிகளும் இத்தகைய இழப்பினை ஆமோதிக்கின்றனர். இந்த இழப்பு இதுவரையில் மனித வரலாற்றில் காணாத அளவு நூறு மடங்கு அதிகமாக உள்ளது.
உயிரியல் பலவகைமைக்கு தீங்குண்டாக்கும் காரணிகள் பலவாறாக வகுக்கப்பட்டுள்ளன. ஜேர்ட் டைமண்ட் என்பவர் “தீய காரணிகள் நான்கு” என வாழிடம் அழித்தல், அதிகமாக அழிவு, அறிமுகப்படுத்தப்படும் இரகங்கள் மற்றும் இரண்டாம் நிலை விரிவாக்கம் போன்றவற்றை குறிப்பிடுகின்றனர். எட்வர்ட் ஒ.வில்ஸன் என்பவர் ஆங்கிலத்தில் HIPPO (ஹிப்போ) என கூறுகின்றனர். அதாவது வாழிடம் அழித்தல் (H-Habitat destruction) அறிமுகப்படுத்தப்படும் சிற்றினங்கள் (I-Invasive species), மாசுபாடு (P-Pollution), மனித மக்கள் தொகை அதிகரிப்பு  (P-human over population), மற்றும் அதிகமான அறுவடை (O-Overharvesting) என ஐந்தினை குறிப்பிடுகின்றனர். தற்போது நடைமுறையில் பின்பற்றப்படுவது ஐ.யு.சி.என் (IUCN) வகைப்பாடு் கூறியுள்ள நேரிடை தீங்குகள் ஆகும். இதுவே சர்வதேச பாதுகாப்பு மையங்களான ஐக்கிய அமெரிக்கா இயற்கை பாதுகாப்பு மையம், உலக விலங்கினங்கள் நன்கொடை சர்வதேச பாதுகாப்புமையும் மற்றும் சர்வதேச பறவை வாழ் மையம் ஆகியவை கடைபிடிக்கும் முறைகள் ஆகும்.

1. வாழிடம் அழித்தல்
கி.பி.1000 முதல் கி.பி.2000 வரையில் அழிவிற்கு உண்டான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் மனித நடவடிக்கையின் மூலம் ஏற்பட்டதே ஆகும். அங்கக ஆதாரங்களை மனிதர்கள் தங்கள் உணவில் சேர்த்து கொண்டது வெப்பமண்டல காடுகளின் அழிவிற்கு காரணமாகும். சிற்றனங்களின் அழிவு உணவிற்காகவோ அல்லது அவைகளின் வாழிடம் அழிக்கப்பட்டு விளை நிலங்கள் மற்றும் தோட்டங்களாகவோ மாற்றப்பட்டன. பூமியின் மொத்த உயிர் பொருள்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேலாக மனிதர்கள் பயிர்கள் மற்றும் கால்நடைகள் உள்ளன. பூமியில் உள்ள பலவகைப்பட்ட உயிரினங்கள் குறைந்து கொண்டே வரும் பொழுது அதன் சூழிடம் தனது நிலைத்தன்மையை இழந்துவிடும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல்வகைமை இழப்பிற்கான காரணிகள்: மக்கள் தொகை பெருக்கம் காடுகள் அழிவு, மாசுபாடு (காற்று மாசுபாடு, மண் மாசுபாடு, நீர் மாசுபாடு) மற்றும் பூமி வெப்பமடைதல் (அ) சூழ்நிலை மாற்றம். இவை அனைத்தும் மனித நடவடிக்கைகளால் வருவனவேயாகும். இவ்வனைத்து காரணிகளும் மக்கள் தொகை பெருக்கத்தால் வந்தாலும் பல்வகைமையை பாதிக்கும் ஒட்டு மொத்த தாக்கத்தை உண்டாக்குகிறது.
வாழிடத்தின் பரப்பளவு மற்றும் அங்கு வாழும் சிற்றினங்களின் எண்ணிக்கைக்கும் முறையான ஒரு தொடர்பு உண்டு. அதிக உடல் அளவு கொண்ட (சிற்றனங்களுக்கு குறைந்த வாழிடமும் அதே போல் தாழ்ந்த நிலநோக்கோடு (அ) காடுகள் (அ) பெருங்கடலில் வாழ்பவைகளுக்கும் குறைந்த வாழிடமும் கிடைக்கும். சிலர் உயிரியல் பலவகைமையின் இழப்பு சூழிடம் அழிவினால் ஏற்படாது எனவும் மும்முனை நிலைப்படுத்தப்பட்ட சூழிடம் (எ.கா காடுகளை அழித்து ஒரு பயிர் வளர்ப்பு முறை) மாற்றத்தினால் ஏற்படுவதே என்கின்றனர். பொருள் உரிமைகள் இல்லாத (அ) உயிரியல் ஆதாரங்களை அடையும் தடைகள் இல்லாத சில நாடுகளில் உயிரியல் பல்வகைமைகளின் இழப்பு இருக்கும். தேசிய அறிவியல் நிறுவனம், செப்டம்பர் 14, 2007 ல் நடத்திய ஆய்வின் படி உயிரியல் பல்வகைமை மற்றும் மரபணு பல்வகைமை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளது எனவும், ஒரு சிற்றினத்தின் வேறுபாடு பல சிற்றினங்களுக்கு கிடையே உள்ள வேறுபாட்டிற்கு முக்கியம் எனவும் கூறியது. டாக்டர். ரிச்சர்ட் லிங்காவு கூறுகையில் இம்முறையில் ஒரு வகையை அகற்றினால் கூட அதன் சங்கிலி உடைந்து அதனால் சமூகத்தில் ஒரே சிற்றினம் பெருகிவிடும் என்கிறார்.
தற்போது அதிகமாக ஆபத்தில் உள்ள சூழிடம் நீர் நிலைகளில் உள்ளவைதான் . மில்லினியம் சூழிடம் ஆய்வு 2005 மற்றும் தூய நீர்நிலை விலங்கின வேறுபாடு ஆய்வு போன்ற திட்டப்பணிகள் மூலம் அதிகமான ஆபத்தை எதிர் கொள்வது தூய நீர்நிலை சூழிடம் என உறுதி செய்யப்பட்டது.

2. தாயகம் அல்லாத சிற்றினங்கள்
உலகெங்கிலும் உள்ள பல வகைப்பட்ட உயிரினங்கள் அதிகமாக ஒவ்வோர் இடத்திலும் அமைந்திருப்பது பிற உயிரினங்களிடம் இருந்த பிரித்து தடுத்து உள்ளதால் தான். அத்தகைய தடுப்புகள் நீண்ட ஆறுகள், கடல்கள், பெருங்கடல்கல், மலைகள் மற்றும் பாலைவனங்கள் ஆகியவை தங்களுக்குள் ஏற்ற தாழ்வுகளுடன் அங்கு வாழும் உயிரினங்கள் பிற இடங்களுடன் கலந்துவிடாமல் தடுக்கின்றன. கண்டங்களுக்குள் தாழ்வு ஏற்பட்டால் ஒழிய இத்தகைய உயிரினங்கள் மேற்கூறிய தடைகளை தாண்டி செல்தல் இயலாது. ஆயினும் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதிகளில் ஒவ்வோர் இடத்திலிருந்தும் சிற்றினங்கள் மற்ற இடத்திற்கு இடம் பெயர்வது எளிதாகிவிட்டது. சரித்திரத்தில் கூறியுள்ளது போல் விலங்குகள் இடம் பெயர்வது நூற்றாண்டு கணக்கில் இல்லாமல் சில நாட்களிலேயே ஏற்படுகின்றது. 
மனிதர்களால் அறிமுகப்படுத்தப்படும் தாயகம் அல்லாத சிற்றினங்களால் உயிரியல் பல்வகைமைக்கு ஆபத்து எற்படும். தாயகம் அல்லாத இரகங்கள் இங்கு சூழிலடத்தில் உள்ள தாயக இரகங்ககளை எதிர்த்து வாழ்வது சிரமமாகி அழிவை நோக்கி செல்கின்றன. தாயகம் அல்லாத உயிரினங்கள் இரை விழுங்கிகள், ஒட்டுண்ணிகள் (அ) ஆளுமை கொள்ளும் உயிரினங்களுக்கு இருக்கலாம். இவை தாயக உள்நாட்டு இரகங்களுக்கு தேவையான சத்துகள், நீர் மற்றும் ஒளி ஆகியவற்றை ஆட்கொள்கின்றன. தாயகம் அல்லாத அறிமுக இரகங்கள் தங்கள் பரிமான பிண்ணனியாலும் புதிய சூழலில் போட்டியிட்டு நன்கு வளர்ந்து பரவி விடுகின்றனர். இத்தகைய சூழலில் அங்குள்ள தாயக இரகங்களின் வாழிடத்தை குறைத்துவிடுகின்றனர்.
மேற்கூறிய சூழ்நிலைகள் தொடருமானால் மனிதர்கள் பல்வேறு இடங்களிலிருந்து கொணரும் சில இரகங்கள் மட்டும் இவ்வுலகில் செழித்து வளர்ந்து எங்கும் வளரும் மேம்பட்ட இரகங்களாக உருவாகிவிடும். 2004 ம் வருடம் சர்வதேச வல்லுநர் குழு கணக்கீட்டு பூமி வெப்பமடைவதால் 2050 ம் வருடத்திற்குள் 10 சதவீத இரகங்கள் அழிந்துவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். சர்வதேச பாதுகாப்பு மையத்தின் பிரத்யோக உயிரியல் பல்வகைமை அறிவியல் மையத்தில் உள்ள டாக்டர்.லீ ஷன்னா, கூறுகையில் நாம் சுற்றுச்சூழலின் தன்மையை மாற்ற வேண்டும். இல்லையெனில் பல சிற்றினங்கள் அழிந்துவிடும் என்கிறார்.

3. மரபனு மாசுபாடு
கட்டுப்படுத்தாத கலப்புயிர்தல் மூலம் அந்த இடத்திற்கு சொந்தமான தாயக இரகங்களில் மரபணு மாசுபாடு ஏற்படுகின்றது. அறிமுகப்படுத்தப்படும். உயிரினங்களால் தாயக உயிரினங்களில் சம அமைப்பான (அ) ஏற்கனவே உள்ள மரபியல் மாற்றம் ஏற்படுகின்றது. மனிதர்கள் தாங்கள் தேவைக்காக இடம்பெயரும் பொழுது (அ) வாழிடம் மாற்றம் ஏற்படும் பொழுது ஏற்படும் உட்கலப்பு (அ) கலப்புயிர்தல் மூலம் தாயக உயிரினங்கள் வகைகளும் கலக்கும் அரிதான வகைகளும் அதிகமாக உள்ள வகைகளும் கலக்கும் பொழுது இத்தகைய தாக்கம் மிகவும் ஆபத்தானது ஆகும். அதிகமாக உள்ள வகை அரிதானதுடன் கலந்து தனது மரபியல் அணுக்களை இழந்து வீரிய இரகங்கள் உருவாகி விடும். இத்தகைய நிலை தாயக வகைகளை முழுதாக அழித்துவிடும். வெளிப்புறத்தில் மட்டுமே ஆய்வுகள் செய்யாமல் இத்தகைய கலப்புயிர்தலில் உள்புறமும் மேற்கொள்வது சிறந்ததாகும். சில அளவிளான மரபணு மாற்றங்கள் பொதுவாக நடைபெறக்கூடியதாகும். இத்தகைய பரிமான வளர்ச்சியின் போது மரபணுக்கள் காரப்பாற்றமுடியாதது இயற்கைதான் ஆயினும் கலப்புயிர்தல் மற்றும் மறுகலப்பின் மூலம் ஏற்படும் இழப்பு தவிர்க்கமுடியாது.

4. கலப்புயிர்தல் மற்றும் மரபியல்
வேளாண்மை மற்றும் கால்நடை துறையில் பசுமைப் புரட்சியின் போது “புதிய வீரிய இரகங்களை” உருவாக்குவதற்கு கலப்புயிர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வளர்ந்தநாடுகளில் உருவாக்கப்பட்ட வீரிய இரகங்களின் விதைகள் வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள உள்நாட்டு இரகங்களுடன் கலக்கச் செய்து அந்த சூழலுக்கு ஏற்ற நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட விதைகளை உருவாக்கப்பட்டன. அரசும் தொழிற்கூடங்களும் கலப்புயிர்தலை ஊக்குவித்தால் உள்நாட்டு இரகங்கள் அழியும் ஆபத்தை எதிர்நோக்கின. நோக்கத்துடன் மற்றும் நோக்கமில்லாமல் மேற்கொள்ளப்பட்ட பிற மகரந்த சேர்க்கை மற்றும் பிற கலப்புயிர்தல் போன்ற செயல்பாடுகள் உள்நாட்டு இரகங்களின் மரபணு இழப்பு மற்றும் மரபணு மாசுபாடு ஏற்பட காரணமாக இருந்தது.
மரபணு மாற்று உயிரினம் (genetically modified organism)  என்பது மரபுப்பொறியியலின் மரபணு டிஎன்ஏ மறுசேர்க்கை தொழில்நுட்பத்தின் மூலம் மரபியல் கூறு மாற்றப்பட்டதாகும். மரபணு மாற்று உயிரினங்களே தற்பொழுது ஏற்படும் மரபணு மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாகும். இது காட்டு இரகங்கள் அல்லாமல் உள்நாட்டு இரகங்களினும் ஏற்படுகின்றது.
மரபணு இழப்பு மற்றும் மரபணு மாசுபாடு ஒரு குறிப்பிட்ட மரபியல் தோற்றத்தினை அழித்து மறைமுகமாக நமது உணவு பாதுகாப்பினை அழிவுப் பாதையில் கொண்டு செல்கிறது. பல்வகையான மரபியல் பொருள் அழிந்துவிடுவதால் மேலும் நமது உணவுப்பயிர்கள் மற்றும் கால்நடைகளை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும் சூழ்நிலை மாற்றத்திற்கு ஏற்றதாகவும் மாற்றுதல் கடினமாகும்.

5. சுற்றுச்சூழல் மாற்றம்:
பூமியின் உயிரியல் பல்வகைமை இழப்பிற்கு பூமி வெப்பமடைதல் முக்கிய காரணமாகும். உதாரணமாக பூமி தற்போதைய நிலையிலேயே வெப்பமடைந்து வருமானால் உயரியல் பல்வகைமையின் முக்கிய தளங்களாக கருதப்படும் பவளப்பாறைகள் இன்னும் 20 முதல் 40 ஆண்டுகளில் அழிந்துவிடும்.

 

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015